Enter your Email Address to subscribe to our newsletters

தர்மபுரி, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் விஐபி நகரைச் சேர்ந்த இன்ஜினியர் தனபால், ராமசாமி கோவில் அருகே உள்ள எம்எல்ஏ அலுவலகம் முன்பு தனது காரை நிறுத்தியிருந்தார்.
அப்போது மொரப்பூர் சாலையில் இருந்து அதிவேகமாக வந்த மினி லாரி, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது மோதியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் மீதும் பயங்கரமாக மோதியது.
இதில் சாலையில் நடந்து சென்ற முதியவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். காரில் இருந்த இன்ஜினியர் தனபால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
படுகாயமடைந்த முதியவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பது தெரியவந்துள்ளது. விபத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam