தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதையே தொடர் கொலைகள் காட்டுகின்றன – தி.மு.க ஐடி விங்
சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.) கடலூர் அருகே பட்டப்பகலில் டிரைவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, பின்னர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு குறித்து திமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக திமுக
Arivalayam


Nn


சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)

கடலூர் அருகே பட்டப்பகலில் டிரைவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, பின்னர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு குறித்து திமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளப் பதிவில்,

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில், 24 மணி நேரத்திற்குள்ளேயே 3 கொலைகள் அரங்கேறியுள்ளது.

இதுவே தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கிறது? எந்த லட்சணத்தில் இருக்கிறது? என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதனையெல்லாம் கவனிக்க வேண்டிய முதலமைச்சரோ, உண்மைகளை செய்தியாக வெளியிடும் நபர்களையும், எதிர்க்கட்சியினரையும் எப்படி கைது செய்யலாம் என்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார் என திமுக ஐடி விங் குற்றம்சாட்டியுள்ளது.

தொடர்ந்து, இனிமேலாவது மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை காக்கவும், பொதுமக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழவும் இந்த அரசு உறுதியேற்க வேண்டும் என அந்தப் பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ