பல்லடத்தில் திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் தாயுடன் படுகொலை - இளைஞர் கைது
திருப்பூர், 11 ஆகஸ்ட் (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாயும் மகளும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளம்பெண்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளைஞர் ஒருவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால்
Double murder in Palladam


திருப்பூர், 11 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாயும் மகளும் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த இளம்பெண்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளைஞர் ஒருவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இளம்பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் நேற்று இரவு அவர்களது வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து, தாய் மற்றும் மகள் இருவரையும் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இரட்டைக் கொலைக்கு காரணமான இளைஞரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பல்லடத்தில் நிகழ்ந்த இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b