Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை சற்று ஏறுமுகமாக உள்ளது.
அந்த வகையில் நேற்று ஆகஸ்ட் 10ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,250க்கும், சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.235 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,000க்கும், சவரனுக்கு ரூ.1,880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260, ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P