மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - நீர்மட்டம் 79 அடியை நெருங்குகிறது
சேலம், 11 ஆகஸ்ட் (ஹி.ச.) சேலம் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 5760 கன அடியாக
Inflow to Mettur Dam increases


சேலம், 11 ஆகஸ்ட் (ஹி.ச.)

சேலம் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 5760 கன அடியாக இருந்த நிலையில், இன்று 7151 கன அடியாக உயர்ந்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 78.81 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 79.17 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு 41.13 டிஎம்சியாக அதிகரித்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, டெல்டா பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b