Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம்
20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தொடரில் டெல்லி மாணவர் போராட்டத்தின்போது நடைபெற்ற தடியடி, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் இரு அவைகளிலும் அவ்வப்போது அமளி ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான கேரள (பெயர் மாற்றம்) மசோதா, 2016 மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசினார்.
கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவது தொடர்பாக கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மாநில அரசால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த மசோதா மூலம் கேரள மாநிலத்தின் பெயரை மாற்றுவதுடன், அதற்கு ஏற்ப அரசியல் சாசனத்தின் தொடர்புடைய பிரிவுகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி நித்யானந்த ராய் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மசோதா பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக பெரும்பான்மை உறுப்பினர்கள் குரல் கொடுத்ததை தொடர்ந்து, கேரள (பெயர் மாற்றம்) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல், தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக (திருத்த) மசோதா, 2026-ம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய இணை மந்திரி மொஹல் முரளிதர் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். பின்னர் மசோதா பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மசோதாவை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையின்போது, ஆதரிப்போர் கையை உயர்த்துமாறு மக்களவை தலைவர் கிருஷ்ண பிரசாத் தென்னட்டி கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக (திருத்த) மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
இதன்பின்னர் மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA