Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுவாணி அருவி என்றழைக்கப்படும் கோவை குற்றாலத்தில், கடந்த சில வாரங்களாக பெய்து வந்த தொடர் கனமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அபாய அளவை எட்டியது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் அருவிக்கு செல்ல தற்காலிக தடை விதித்து மூடியிருந்தனர்.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்து, அருவியில் நீர்வரத்து சீராகி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
மேலும் அருவிக்கு செல்லும் பாதைகளில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளும் நிறைவடைந்ததை அடுத்து, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
சுமார் 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் இன்று முதல் திறக்கப்படுவதால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வனத்துறையின் வழிகாட்டுதலின்படி, அருவியின் குறிப்பிட்ட பாதுகாப்பு எல்லைக்குள்ளேயே பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர்.தற்போதைய சூழல் மற்றும் வானிலை நிலவரங்களை அறிய கோவை குற்றாலம் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எண்ணான 7826070883 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b