தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். நீட் கட்-ஆஃப் கிடுகிடு உயர்வு
சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான நீட் கட்-ஆஃப் மதிப்பெண் கணிசமாக உயரும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 முதல் 40 மதிப்பெண்கள் வரை கட்-ஆஃப் உயரக்கூடும் என எதிர்பார்க்க
MPBS in Tamil Nadu NEET cut-off has been hiked


சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான நீட் கட்-ஆஃப் மதிப்பெண் கணிசமாக உயரும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 முதல் 40 மதிப்பெண்கள் வரை கட்-ஆஃப் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மட்டும் 20 முதல் 29 மதிப்பெண்கள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பிரபல கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்த உயர்வுக்கு முக்கிய காரணம், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருப்பதுதான்.

கடந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 111 பேர் மட்டுமே. ஆனால் நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை 728 ஆக உயர்ந்துள்ளது.

கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகரிப்பு என்பதால், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களுக்கான போட்டி மிகக் கடுமையாகியுள்ளது.

இதேபோல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுப் பிரிவிலும் கட்-ஆஃப் வரலாறு காணாத அளவுக்கு உயரக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இந்தப் பிரிவில் மட்டும் இந்த ஆண்டு 49 மதிப்பெண்கள் வரை கட்-ஆஃப் உயரக்கூடும் என கல்வியாளர்கள் கணித்துள்ளனர்.

7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த 4,860 மாணவர்களில், 3,625 மாணவர்களின் விண்ணப்பங்கள் தகுதியானவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

தகுதியான மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இந்தப் பிரிவிலும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b