Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி உரிமைகள் குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,
மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, பெருநிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் பாஜக அரசின் சதியை காங்கிரஸ்
எதிர்க்கிறது!
Mines and Minerals (Development and Regulation) Amendment Bill, 2026-ன் மூலம்:
Clause 4 (Section 9D): கனிம உரிமைகள் மற்றும் கனிம நிலங்கள் மீது மாநில அரசுகள் வரி, தீர்வை (tax/cess/levy) விதிக்கத் தடை விதிக்கிறது; நீதிமன்ற உத்தரவுகளையும் ரத்து செய்கிறது.
Clause 5 (Section 13): மாநிலங்கள் வரி விதிக்கும் அதிகாரத்திற்கு ஒன்றிய அரசே நிபந்தனைகளை நிர்ணயிக்கும் விதியை புகுத்துகிறது.
உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, கனிமங்கள் மீது வரி விதிக்கும் உரிமை மாநிலங்களுக்கு உண்டு என்று வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை (8:1) இந்த சட்டத்திருத்தம் முடக்கப் பார்க்கிறது.
மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அனைத்தையும் ஒற்றை அதிகார மையமாக மாற்றும் உங்கள் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது!
கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக மாநிலங்களின் நிதி உரிமைகளைச் சுருக்கக் கூடாது! உடனடியாக இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு
(Standing Committee) அனுப்ப வேண்டும் என கோருகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN