Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் நுழைவுத் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி இரு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தத் தீர்மானங்கள் பாஜகவைத் தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டின் நலன் சார்ந்த முக்கிய விவகாரங்களில் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஒற்றுமையான முடிவை எடுத்துள்ள தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ள கமல்ஹாசன், தமிழ்நாட்டின் நலனுக்கான இந்த ஒற்றுமைப் போக்கு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P