Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ராம்நாத் கோவிந்த். இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை நாட்டின் ஜனாதிபதியாக பணியாற்றினார்.
இந்த நிலையில், ராம்நாத் கோவிந்த் தனது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை தொகுத்து சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
‘இந்திய குடியரசின் வெற்றி:
என் வாழ்க்கை, என் போராட்டங்கள்’ என்ற தலைப்பில் இந்தப் புத்தகம் உருவாகியுள்ளது. இதில் அவரது வாழ்க்கைப் பயணம், அரசியல் அனுபவங்கள் மற்றும் பொது வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சுயசரிதை புத்தகத்தின் வெளியீட்டு விழா நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் அவரது சுயசரிதை புத்தகத்தை வெளியிடுகிறார்.
ராம்நாத் கோவிந்தின் அரசியல் மற்றும் பொது வாழ்க்கை அனுபவங்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்த சுயசரிதை புத்தகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA