Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த கலவரம் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. மற்றும் என்.ஐ.ஏ. விசாரித்து வருகின்றன. இந்த வழக்குகளின் விசாரணை நிலவரத்தை சுப்ரீம் கோர்ட்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கலவரம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒரே இடத்தில் தொகுத்து வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் வக்கீல்கள் வழக்குகளுக்குத் தேவையான ஆவணங்களை எளிதாக பார்வையிட முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், மணிப்பூர் கலவரம் தொடர்பான சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்க ஒரு தனிக்கோர்ட்டும், என்.ஐ.ஏ. வழக்குகளை விசாரிக்க மற்றொரு தனிக்கோர்ட்டும் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
வழக்குகளின் விசாரணையை விரைந்து நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA