Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
கரூர் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தங்களது அன்றாடப் பணிகளைப் புறக்கணித்து இன்று திடீர் போராட்டத்தைத் தொடங்கினர்.
நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழுநேர வேலை அல்லது கூடுதல் ஷிப்டுகளில் வேலை செய்ய அதிகாரிகள் வற்புறுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது.
பணியாளர்களுக்குத் தேவையான கையுறைகள், முகக்கவசங்கள் மற்றும் அடிப்படைப் பாதுகாப்புப் பொருட்களை நகராட்சி நிர்வாகம் முறையாக வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் வேலைநிறுத்தம் காரணமாக கரூரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளன.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
போராட்டம் குறித்து தகவலறிந்த அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b