மேற்கு வங்க SIR விவகாரம் - வாக்காளர் பெயர் நீக்கப்பட்டோரின் மேல்முறையீடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்பு
புதுடெல்லி, 11 ஆகஸ்ட் (ஹி.ச.) மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (SIR) நடவடிக்கையில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடுகள் தொடர்பான முழுமையா
உச்சநீதிமன்றம்


புதுடெல்லி, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)

மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (SIR) நடவடிக்கையில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடுகள் தொடர்பான முழுமையான விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, பெயர் நீக்கப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளில் எத்தனை வழக்குகள் தீர்வு செய்யப்பட்டுள்ளன, எத்தனை நிலுவையில் உள்ளன என்பது குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளது.

இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி தாக்கல் செய்த மனுவுக்கும் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் பதில் கோரி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு Block அளவிலும் SIR மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களை அமைத்து, வாக்காளர் பெயர் நீக்கப்பட்டவர்கள் எளிதாக மேல்முறையீடு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள.

மேல்முறையீடுகளை காலதாமதமின்றி விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் அதீர் ரஞ்சன் தனது மனுவில் கோரியுள்ளார். SIR நடவடிக்கையில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் தொடர்பாக ஆட்சேபனைகள் மற்றும் மேல்முறையீடுகள் எழுந்துள்ள நிலையில், தற்போதுள்ள தீர்ப்பாயங்களின் எண்ணிக்கை போதுமானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P