Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு, கல்வி மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என வலியுறுத்தும் அரசின் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரியது, வரவேற்கத்தக்கது.
மாநில உரிமைகளை விட்டுத்தராத இந்தப் போக்கு தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
1891-ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய பாடல், 1970 முதல் அரசு விழாக்களின் தொடக்கப் பாடலாகவும், 2021 முதல் தமிழ்நாட்டின் மாநிலப் பாடலாகவும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ளது.
சமீபத்திய சில பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்படாதது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam