Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவையில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, திமுக–பாஜக இடையே கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன்,
அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது; நிரந்தர எதிரிகளும் கிடையாது. கூட்டணி உருவாகும்போது சொல்வார்கள். உருவாவதற்கு முன்னால் நீங்களே உருவாக்கிவிடுவீர்கள் போல. அதற்கான சூழல் வரும்போது பார்க்கலாம்” என்று தெரிவித்தார்.
திமுக–பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா என்று மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டபோதும், அவர் அதனை திட்டவட்டமாக மறுக்கவில்லை. அரசியலில் நிரந்தர நண்பர்களோ, நிரந்தர எதிரிகளோ இல்லை என்ற தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
இதனால், திமுக–பாஜக இடையே கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்பை வானதி சீனிவாசன் வெளிப்படையாக நிராகரிக்காமல், சூழல் வரும்போது பார்க்கலாம்” என சூசகமாக பதிலளித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
இதனிடையே, கோவையில் நடைபெற்ற அலங்கார ஆடை அணிவகுப்பு நிகழ்வு குறித்தும் வானதி சீனிவாசன் பேசினார்.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பாரம்பரிய நெசவு முறைகள், ஆடைகள் மற்றும் அவற்றின் சிறப்புகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.
நமது பாரம்பரிய நெசவுத் தொழில் மற்றும் கலாசாரத்தை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதில் இதுபோன்ற நிகழ்வுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P