Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஆகஸ்ட் (ஹி.ச.)
VVIP ஒருவர் வரும் ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னை வருகை தர உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட மீனம்பாக்கம், கிண்டி, தி.நகர், அரும்பாக்கம் மற்றும் VVIP பயணிக்கும் வழித்தடங்கள் ‘ரெட் சோன்’ (RED ZONE) பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளைத் தவிர, ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களில் மேற்கண்ட பகுதிகள் மற்றும் VVIP பயணிக்கும் வழித்தடங்களில் ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகளை (Unmanned Aerial Objects) பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 2023-ன் பிரிவு 163 மற்றும் பிரிவு 14-ன் உட்பிரிவு (2) ஆகியவற்றின் கீழ், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் பிற ஆளில்லா வான்வழி கருவிகளைப் பறக்கவிடுவதற்கான தடை உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது.
அதன்படி, ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் விமானங்கள், பாரா கிளைடர்கள், பாரா மோட்டார்கள், ஹேங் கிளைடர்கள், ஹாட் ஏர் பலூன்கள் உள்ளிட்டவற்றை பறக்கவிடுவதற்கு 19.06.2026 முதல் 17.08.2026 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
VVIP-ன் சென்னை வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் ட்ரோன் இயக்குபவர்கள் இந்தத் தடை உத்தரவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ