வேளாண்மை – நாட்டின் முதுகெலும்பு!
தமிழ்நாடு, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) வேளாண்மை என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை உள்ளிட்டவற்றை வழங்கும் மிக முக்கியமான தொழிலாகும். உலகின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத்துடன் வேளாண்மை நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடையது. குறிப்பாக இந்தியா
க


தமிழ்நாடு, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

வேளாண்மை என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை உள்ளிட்டவற்றை வழங்கும் மிக முக்கியமான தொழிலாகும். உலகின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத்துடன் வேளாண்மை நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடையது. குறிப்பாக இந்தியா போன்ற வேளாண்மை சார்ந்த நாட்டில் விவசாயத்திற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.

தமிழகத்தின் பாரம்பரியத்திலும் வேளாண்மைக்கு தனிச்சிறப்பு உண்டு. நெல், கரும்பு, வாழை, தென்னை, பருத்தி, நிலக்கடலை, சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் தமிழகத்தில் சாகுபடி செய்யப்படுகின்றன. விவசாயிகளின் கடின உழைப்பால் மக்களின் உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் வேளாண்மை பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. பருவநிலை மாற்றம், மழைப்பொழிவில் ஏற்படும் மாற்றம், நீர்ப்பற்றாக்குறை, மண் வளம் குறைதல், பூச்சித் தாக்குதல், உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது போன்றவை விவசாயிகளுக்கு பெரும் சவால்களாக உள்ளன.

இந்த சவால்களை சமாளிக்க நவீன வேளாண் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது அவசியமாகிறது. சொட்டுநீர் பாசனம், தெளிப்புநீர் பாசனம், மண் பரிசோதனை, இயற்கை உரங்கள், உயிர் உரங்கள், இயந்திரமயமாக்கல், செயற்கைக்கோள் தொழில்நுட்பம், ட்ரோன் பயன்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வேளாண்மையில் புதிய மாற்றங்களை உருவாக்கி வருகின்றன.

மேலும் இயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ரசாயனப் பயன்பாட்டைக் குறைத்து மண் வளத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் முறைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க விளைபொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். சேமிப்பு கிடங்குகள், குளிர்சாதன வசதிகள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் நேரடி சந்தைப்படுத்தல் போன்றவை விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை வழங்க முடியும்.

“உழவன் இல்லையேல் உணவில்லை” என்ற உண்மை எப்போதும் நினைவில் இருக்க வேண்டும். விவசாயிகளின் உழைப்பை மதிப்பதுடன், நீர், மண், விதை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும்.

வேளாண்மை வளர்ந்தால்தான் நாட்டின் பொருளாதாரமும், உணவுப் பாதுகாப்பும் வலுப்பெறும். எனவே நவீன தொழில்நுட்பத்தையும் பாரம்பரிய அறிவையும் இணைத்து, நிலையான மற்றும் லாபகரமான வேளாண்மையை உருவாக்குவது காலத்தின் தேவையாகும்.

Hindusthan Samachar / Durai.J