நாமக்கல்லில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.20 சரிவு
நாமக்கல், 12 ஆகஸ்ட் (ஹி.ச.) முட்டை உற்பத்தியில் முதன்மை மாவட்டமாக திகழும் நாமக்கல்லில் கறிக்கோழி விலை கணிசமாக சரிந்துள்ளது. உயிருடன் கூடிய கறிக்கோழி ஒரு கிலோ ரூ.20 வரை குறைந்து, தற்போது ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல்லடத்தில் நடைபெற்
Broiler chicken price drops by Rs. 20 per kg


நாமக்கல், 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

முட்டை உற்பத்தியில் முதன்மை மாவட்டமாக திகழும் நாமக்கல்லில் கறிக்கோழி விலை கணிசமாக சரிந்துள்ளது. உயிருடன் கூடிய கறிக்கோழி ஒரு கிலோ ரூ.20 வரை குறைந்து, தற்போது ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பல்லடத்தில் நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு (BCC) கூட்டத்தில் இந்த விலை குறைப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பதால், இறைச்சி விற்பனையில் பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. கோயில்களில் சிறப்பு பூஜைகள், விரதங்கள் காரணமாக கறிக்கோழிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் நிலவும் சில நடைமுறைச் சிக்கல்களால் கறிக்கோழிக்கான தேவை பண்ணை அளவில் குறைந்துள்ளது. தேவை குறைந்ததன் எதிரொலியாகவே விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ஆடி மாதத்தில் குறைவாக நடைபெறுவதும் விலை வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமாகும்.

ஆடி மாதம் முடிந்த பின்னர் மீண்டும் விலை படிப்படியாக உயரக்கூடும் என்று பண்ணையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Hindusthan Samachar / vidya.b