சென்னை, மதுரையில் 7 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை மற்றும் மதுரையில் 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 6 இடங்களிலும், மதுரையில் ஒரு இடத்திலும் என மொத்தம் 7 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லியில் ப
Nia


சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை மற்றும் மதுரையில் 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் 6 இடங்களிலும், மதுரையில் ஒரு இடத்திலும் என மொத்தம் 7 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

டெல்லியில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணையின் அடிப்படையில், தமிழகத்தில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக NIA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தமானில் இருந்து போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் கடந்த 2024ஆம் ஆண்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்த வழக்கின் தொடர்ச்சியாக தற்போது சென்னை மற்றும் மதுரையில் உள்ள இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக NIA அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சோதனை நடைபெறும் இடங்களில் முக்கிய ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ