Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தொகுதி முறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந் தீர்மானத்திற்கு சிபிஐ, சிபிஐஎம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவும் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடபாடி பழனிசாமி கூறியதாவது,
தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் இயக்கம் அதிமுக. தொகுதி மறு வரை தொடர்பான அதிமுகவின் நிலைப்பாடு தெளிவானது. தமிழ்நாடு போன்ற மக்கள் தொகை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு விகிதாச்சாரம் குறையக்கூடாது தமிழ்நாட்டுக்கு தற்போது 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்களில் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 7.18 சதவீதம் விகிதாச்சாரம் அடிப்படையில் தொகுதி மறுவறையில் குறைய கூடாது இதுதான் எங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம்.தற்போதுள்ள விகிதாச்சாரம் குறையாமல் பாதுகாக்கும் என்பது வெளிப்படையாக இல்லை இந்த உறுதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தியதால் நாடாளுமன்றத்தில் விகிதாச்சாரம் பாதுகாக்கப்படும் என உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
7.18 சதவீதத்தில் விகிதாச்சாரம் கிடைத்தால் தமிழகத்திற்கு 20 இடம் கூடுதலால் கிடைத்து 59 இடங்களாக உயரக்கூடும். தற்போது உள்ள எண்ணிக்கையை குறைக்காமல் 50% உயர்த்த வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்படாத எந்த சூழலும் இல்லாத நிலையில் தமிழக வெற்றி கழகம் அரசியல் காரணங்களுக்காக இந்த தீர்மானத்தை அவசர அவசரமாக சட்டமன்றத்தில் அரசினர் தனி தீர்மானமாக கொண்டு வருவதாக நாங்கள் கருதுகிறோம் மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறை வரையறை மசோதாவில் சாதகமாக உள்ளதா பாதகமாக உள்ளதா என்பதை எதுவுமே தெரியாத நிலையில். அரசியல் காரணங்களுக்காக தமிழக வெற்றி கழகம் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை அதிமுக எதிர்க்கிறது இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P