தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் - பா.ம.க எதிர்ப்பு!
சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தொகுதி முறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார், தமிழகத்தில் சென்னை என ஒரு மாநகரா
கணேஷ்


சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தொகுதி முறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார்,

தமிழகத்தில் சென்னை என ஒரு மாநகராட்சி தான் இருந்தது, அதற்குப் பிறகு காலப்போக்கில் அழுதடுத்த மாநகராட்சிகள் வந்துவிட்டது.

கடந்த காலங்களில் தமிழகத்தில் ஒரு சில கட்சிகள் தான் இருந்தது தற்பொழுது பல்வேறு கட்சிகள் உருவாக்கி விட்டன. உள்ளாட்சிகளில் மறுவரை செய்யப்படுகிறது.

திமுக ஆட்சியில் தொகுதி மறுவரையரை குறித்து பேசுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக தமிழக வெற்றிக்கழகம் திமுக பாமக விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றார்கள். கட்சிகளில் கூட மாவட்டங்கள் பிரித்து பொறுப்புகள் நியமிக்கப்படுகிறார்கள், ஏனென்றால் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் அவர் ஏற்றவாறு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படுகிறது.

இந்த தொகுதி மறுவரையரை கொண்டு வந்தால், 117 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக முடியும். இந்த தீர்மானத்தை முதலமைச்சர் திரும்பப் பெற வேண்டும்.

இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை இவ்வாறு அவர் பேசினார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P