Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
மத்திய அரசின் பங்களிப்போடு பண்பாட்டு மையங்களைச் சென்னையிலும் உருவாக்க வேண்டும் எனஇயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்,
மேலும்,உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் குறிப்பிட்டது போல, மகஹரில் அமைக்கப்பட்டுள்ள சந்த் கபீர் அகாடமி பற்றிய செய்தி என்னை மிகவும் கவர்ந்தது. இந்த சாதனைக்கு காரணம் இரட்டை இஞ்சின் ஆட்சி என்று வருணிக்கிறார் அம்மாநில முதல்வர்.
சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தைப் போதித்த சந்த் கபீர் தாஸ் அவர்களின் நினைவிடத்தை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு உள்ளது.
இத்தகைய பண்பாட்டுத் திட்டங்கள் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில்லை.
தேசநலன்' எனும் பரந்த நோக்கில், மத்திய அரசு இதுபோன்ற பிரம்மாண்டமான பண்பாட்டு மையங்களைத் தமிழ்நாட்டிலும் கொண்டு வர வேண்டும்.
வட இந்தியாவில் சந்த் கபீர் தாஸ் எத்தகைய பொது நெறியைப் போதித்தாரோ, அதேபோல தமிழ்நாட்டில் உலகப் பொதுமறையைத் தந்த ஐயன் திருவள்ளுவர், சென்னை ஜீவகாருண்யத்தைப் போதித்த வள்ளலார்,
வடலூர்
தேசபக்தியை ஊட்டிய மகாகவி பாரதியார்,
எட்டயபுரம்
எனப் பல மாபெரும் வழிகாட்டிகள் நமக்கு அமைந்திருக்கிறார்கள்.
எனவே, அரசியல் எல்லைகளைக் கடந்து நமது தேசிய மரபைப் போற்றும் வகையில்,
மத்திய அரசின் பங்களிப்போடு திருவள்ளுவர், வள்ளலார், பாரதியார் போன்ற பண்பாட்டு மையங்களைச் சென்னையிலும் உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN