மீண்டும் உச்சத்தை நோக்கி நகரும் தங்கம், வெள்ளி விலை
சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை சற்று ஏறுமுகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டுமே தங்கம் விலை 2 முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று காலை நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உய
தங்கம்


சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை சற்று ஏறுமுகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டுமே தங்கம் விலை 2 முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்று காலை நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,250க்கும், சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து மாலை நேரத்தில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,150க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று (ஆகஸ்ட் 12) தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.260, ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P