Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள அழைப்பை ஏற்று, “ஹர் கர் திரங்கா” எனப்படும் “வீடு தோறும் மூவர்ணம்” இயக்கத்தின் ஒரு பகுதியாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றிய நயினார் நாகேந்திரன், இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “தேசத்தின் மீது கொண்டுள்ள பேரன்பையும், அளவற்ற நாட்டுப்பற்றையும் பறைசாற்றும் வகையில், ‘ஹர் கர் திரங்கா’ – வீடு தோறும் மூவர்ணம் இயக்கத்தின் ஒரு பகுதியாக இன்று எனது இல்லத்தில் தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து, தேசப்பற்றுடன் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டு மக்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி, சுதந்திர தினத்தை பெருமிதத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P