Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சட்டப்பிரிவு 46(iii)-ன் கீழ் செயல்படும் 220 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கான விண்ணப்ப கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏற்கனவே ஜூலை 22ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 12ஆம் தேதி மாலை 5.45 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, தகுதியான அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்கும் வகையில், விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள பக்தர்கள் நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம்.
மேலும், நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அந்தந்த திருக்கோயில் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ