சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
திருநெல்வேலி, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15 (சனிக்கிழமை) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் அறிவித்துள்ளார். மாவட்ட ஆ
Tasmac Protest


திருநெல்வேலி, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15 (சனிக்கிழமை) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் அறிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) சார்பில் செயல்படும் அனைத்து FL1 உரிமம் பெற்ற மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும்.

மேலும், தங்கும் விடுதிகளுடன் இணைந்த FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கூடங்களும் அன்றைய தினம் செயல்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தாலோ அல்லது பரிமாறினாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆகஸ்ட் 15-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டிருக்கும்.

Hindusthan Samachar / ANANDHAN