தென் மாநிலங்களை வஞ்சிக்கும் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு - சட்டமன்றத்தில் தளி ராமச்சந்திரன் ஆவேசப் பேச்சு
சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். முதலமைச்சர் கொண்டு வரும் தனித
Opposition to constituency delimitation that disadvantages southern states


சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.

முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய உறுப்பினர் செல்லச்சாமி, மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் முன்மாதிரியாக செயல்பட்ட தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இது மிகப்பெரிய துரோகம் என்று சாடினார்.

மக்கள் தொகை கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக பாராட்டப்பட வேண்டிய மாநிலங்களுக்கு, தண்டனை அளிக்கும் வகையில் தொகுதிகளை குறைப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்து, அவர்களின் குரல்வளை முற்றிலுமாக நசுக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்தார்.

எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு சாதகமான வகையில், நியாயமான முறையில் மறுவரையறையை மத்திய அரசு அணுக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்தது.

இந்த ஆதரவை வழிமொழிந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. தளி ராமச்சந்திரன், இது வெறும் தொகுதிப் பங்கீடு பிரச்சினை அல்ல, மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்று கடுமையாக விமர்சித்தார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Hindusthan Samachar / vidya.b