சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 14 நாட்களில் ரூ.1.35 கோடி உண்டியல் வசூல்
திருச்சி, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாட்டில் அம்மன் வழிபாட்டில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், திருச்சி மாவட்டம் சமயபுரத்தில், காவிரியின் வடகரையில் திருச்சிராப்பள்ளியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொல
Samayapuram Mariamman Temple collects ₹1.35 crore


திருச்சி, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் அம்மன் வழிபாட்டில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், திருச்சி மாவட்டம் சமயபுரத்தில், காவிரியின் வடகரையில் திருச்சிராப்பள்ளியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் பரிகாரத் தலமாக விளங்கும் இத்திருக்கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை அண்மையில் எண்ணப்பட்டது. கடந்த 14 நாட்களில் மட்டும் பக்தர்கள் ரூபாய் 1 கோடியே 35 லட்சம் ரொக்கத்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில், ரொக்கப் பணம் மட்டுமின்றி தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களும் அதிக அளவில் காணிக்கையாக கிடைத்துள்ளன. அதன்படி 709 கிராம் தங்கம் மற்றும் 1 கிலோ 998 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க தினமும் வருகை தருவதால் உண்டியல் வசூல் கணிசமாக உயர்ந்துள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b