Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கானாங்காடு கிராமத்தில் பெருமாள், உமா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுடைய மகன் தவசி என்பவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு அப்பா, அம்மாவுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தவசி பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் திடீரென ஒரு மாதத்திற்கு முன்பு காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
காதலி இறந்த துக்கத்திலிருந்து மீளாததால் இதனை மறக்க அவரது அண்ணன் சக்திவேலுடன் கடந்த 20 நாட்களாக பெங்களூரில் இருந்து வந்துள்ளார்.
மீண்டும் இன்று சொந்த ஊரான காணங்காடு கிராமத்திற்கு வந்த தவசி திடீரென அதே கிராமத்தில் சுடுகாட்டு பாதையில் உள்ள வேப்ப மரத்தில் காதலி இறந்த துக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அறிந்த வடபொன்பரப்பி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தவசி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN