டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து என். சந்திரசேகரன் விலகல்
புதுடெல்லி, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என். சந்திரசேகரன், தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அவரது இந்த அறிவி
டாடா சந்திரசேகர்


புதுடெல்லி, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என். சந்திரசேகரன், தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டாடா குழுமத்தில் தனது 40 ஆண்டுகால தொழில்முறை பயணத்தை நிறைவு செய்துள்ளதாக சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மிகவும் மதிப்புமிக்க இந்த நிறுவனத்துக்கு பங்களிக்க கிடைத்த வாய்ப்பு எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது. கடந்த 10 ஆண்டுகளாக டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்தியது மிகப்பெரிய கவுரவமாகவும், ஆழ்ந்த பொறுப்பாகவும் இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

சந்திரசேகரனின் தற்போதைய பதவிக்காலம் 2027 பிப்ரவரி மாதம் வரை உள்ளது. இருப்பினும், தனது தற்போதைய பதவிக்காலம் நிறைவடைந்த பிறகு, மீண்டும் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட விரும்பவில்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், நிறுவனத்தின் அடுத்த தலைவரை விரைவாகத் தேர்வு செய்யுமாறு டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தலைமை மாற்றம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

டாடா குழுமத்தில் 40 ஆண்டுகள் பணியாற்றியுள்ள சந்திரசேகரன், கடந்த ஒரு தசாப்தமாக டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

அவரது விலகல் அறிவிப்பு டாடா குழுமத்தின் அடுத்தகட்ட தலைமை மாற்றம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P