ஸ்ரீநகரில் திரங்கா பேரணியை துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்
ஸ்ரீநகர், 12 ஆகஸ்ட் (ஹி.ச.) நாட்டின் 80-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இன்று ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் (SKICC) இருந்து பிரம்மாண்ட திரங்கா பேரணியை கொடியசைத
The Lieutenant Governor flagged off the Tiranga Rally in Srinagar.


ஸ்ரீநகர், 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

நாட்டின் 80-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இன்று ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் (SKICC) இருந்து பிரம்மாண்ட திரங்கா பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணி ஸ்ரீநகர் வீதிகள் வழியாக நடைபெற்றது. இந்திய சுதந்திரத்தின் 80-வது ஆண்டை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் நடத்தப்படும் ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குடிமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற ஊக்குவிப்பதே இந்த பிரச்சாரத்தின் நோக்கமாகும்.

பிரதமர் நரேந்திர மோடியால் 2022-ம் ஆண்டு ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஹர் கர் திரங்கா பிரச்சாரம், மூவர்ணக் கொடியுடன் தனிப்பட்ட பிணைப்பை ஏற்படுத்தவும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை கௌரவிக்கவும், தேசபக்தியை வலுப்படுத்தவும் நோக்கம் கொண்டது.

இந்த ஆண்டு கொண்டாட்டங்களில் ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மாவட்டங்கள், வட்டாரங்கள் மற்றும் பஞ்சாயத்துகள் தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

ஹர் கர் திரங்கா 2026-ன் முக்கிய அம்சங்களாக திரங்கா பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், பைக் மற்றும் சைக்கிள் பேரணிகள், முக்கிய இடங்களில் மூவர்ண விளக்கு அலங்காரம், அலங்கார நிகழ்ச்சிகள் மற்றும் ரங்கோலி நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

‘வந்தே மாதரத்தின் உணர்வுக்கு திரங்கா வணக்கம்’ என்ற கருப்பொருளில் சிறப்பு நிகழ்ச்சிகளும், பிரபலமான ‘திரங்காவுடன் செல்ஃபி’ முயற்சியும் நடத்தப்பட உள்ளன.

இன்றைய போரணியில் துணைநிலை ஆளுநருடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

பேரணியைத் தொடங்கி வைத்துப் பேசிய ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்மு-காஷ்மீரில் 'ஹர் கர் திரங்கா' என்பது ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்றார்.

மேலும், நாட்டின் ஒற்றுமை மற்றும் தேசபக்தியின் அடையாளமாக விளங்கும் தேசியக் கொடி, இந்த புனிதமான மண்ணில் மிக உயரமாகப் பறப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b