ஆகஸ்ட் 14-ல் தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை
தூத்துக்குடி, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பரலோக மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சி
Tuticorin


தூத்துக்குடி, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பரலோக மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 22-ஆம் தேதி (சனிக்கிழமை) அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

காமநாயக்கன்பட்டி பரலோக மாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் முக்கிய மத விழாவாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, திருவிழாவை முன்னிட்டு முதல் முறையாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் கிறிஸ்தவ சமுதாயத்தினர் மற்றும் ஆலய பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவிழாவில் அதிகளவிலான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN