Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, நேற்று வினாடிக்கு 7,151 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 8,689 கன அடியாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 79.78 அடியாக பதிவாகியுள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு 41.73 டி.எம்.சி.யாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 120 அடி என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணை வாயிலாக திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறுகின்றன.
அதேவேளையில், டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு நிறுத்தப்பட்ட நிலையில், குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b