ஆப்கானிஸ்தான் தொடரை கைப்பற்றுமா? -அயர்லாந்துடன் இன்று 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி
பெல்பாஸ்ட் , 12 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது மற்றும் 3-வது
A


பெல்பாஸ்ட் , 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது மற்றும் 3-வது ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

கடந்த 7-ந் தேதி நடைபெற்ற 2-வது போட்டியில் அயர்லாந்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான், அதன்பிறகு நடைபெற்ற 3-வது போட்டியிலும் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இன்று 4-வது போட்டி

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி பெல்பாஸ்டில் இன்று நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி மாலை 3.15 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்குகிறது.

அதேவேளையில், தொடரில் இதுவரை வெற்றியைப் பதிவு செய்யாத அயர்லாந்து அணி, சொந்த மண்ணில் முதல் வெற்றியை பெறும் நோக்குடன் விளையாட உள்ளது.

எனவே, இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA