ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னைக்கும் கேரளாவின் கொல்லத்திற்கும் இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, சென்னையில் இருந்து கொல்லத்திற்கு இன்று முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழம
Special trains announced between Chennai and Kollam for the Onam festival.


சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னைக்கும் கேரளாவின் கொல்லத்திற்கும் இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, சென்னையில் இருந்து கொல்லத்திற்கு இன்று முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில் சென்னையில் இருந்து மதியம் 3.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து சென்னைக்கு ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு ரயில் இயக்கப்படும். கொல்லத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சென்னையில் வசிக்கும் ஏராளமான கேரள மக்கள் இந்த சேவையால் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b