Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் நிலை தொடர்வதாகவும், இதனை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதே முக்கிய காரணம் என்றும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில்,
ஏரி, குளங்கள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க உடனடியாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வேண்டும் என்றும், லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே ஏரி, குளங்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாருவதுடன், மழைநீரை சேமிக்கும் வகையில் ஆங்காங்கே சிறு தடுப்பணைகள் அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P