தொடர் ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை - கலக்கத்தில் நகைப்பிரியர்கள்!
சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை சற்று ஏறுமுகமாக உள்ளது. நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டுமே தங்கம் விலை 2 முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ
தங்கம்


சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை சற்று ஏறுமுகமாக உள்ளது.

நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டுமே தங்கம் விலை 2 முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பிறகு இன்று (ஆகஸ்ட் 13 ) தங்கம் விலை மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது

தொடர்ச்சியாக தங்கம் விலை அதிகரித்து வருவது நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,220க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,760க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.260, ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P