டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழா முழு ஒத்திகை கோலாகலம்
புதுடெல்லி, 13 ஆகஸ்ட் (ஹி.ச.) வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதன் முக்கிய நிகழ்வாக டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். இந்த விழாவிற்கான
Grand full-dress rehearsal for the Independence Day celebrations at the Red Fort in Delhi


புதுடெல்லி, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இதன் முக்கிய நிகழ்வாக டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யும் வகையில் இன்று காலை செங்கோட்டை வளாகத்தில் முழு ஒத்திகை நடத்தப்பட்டது.

இந்திய ராணுவத்தினர் செங்கோட்டைக்கு அருகிலுள்ள டங்கல் பூங்காவில் பாரம்பரிய 21 குண்டுகள் முழங்கும் ஒத்திகையை வெற்றிகரமாக நடத்தினர்.

இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் முதல்முறையாக, தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாக செங்கோட்டையிலிருந்து 'வந்தே மாதரம்' பாடல் பாடப்படவுள்ளது.

முப்படை வீரர்களின் அணிவகுப்பு, தேசியக் கொடியேற்றும் ஒத்திகை, பாதுகாப்பு ஒத்திகை உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் நிஜ விழாவைப் போலவே நடத்திக் காட்டப்பட்டன.

இந்த ஒத்திகை நிகழ்வை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

சுதந்திர தினத்தையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 13 காலை 4 மணி முதல் காலை 10 மணி வரை செங்கோட்டையைச் சுற்றியுள்ள முக்கியச் சாலைகள் பொதுப் போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளன.

செல்லுபடியாகும் 'ஒத்திகை லேபிள்கள்' கொண்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

Hindusthan Samachar / vidya.b