Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திரதினம் நாளை மறுதினம் (ஆகஸ்ட் 15) எழுச்சியுடன் கொண்டாடப்பட உள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஒட்டுமொத்த தேசத்தையும் ஒருங்கிணைத்த நமது தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதைப் போற்றும் விதமாக இந்த ஆண்டு விழா அமைகிறது.
தமிழக அரசின் சார்பில் சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவிற்கான இறுதி மற்றும் 3-வது நாள் அணிவகுப்பு ஒத்திகை இன்று காலை வெற்றிகரமாக நடைபெற்றது.
அதே போல் தமிழகத்தின் அணைத்து மாவட்டங்களிலும் சுதந்திரதின விழா அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் சுதந்திரதினத்தன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதிக் தாயள், திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொள்ள உள்ளார்.
முன்னதாக சுதந்திரதின விழாவில் பங்கேற்கும் காவல்துறையினருக்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் 250க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் காவலர்கள் துப்பாக்கி ஏந்தியபடியும், அதனைத்தொடர்ந்து தீயணைப்புத் துறையினர், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர் பங்கேற்று அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
Hindusthan Samachar / vidya.b