கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து குறைவு - காவிரியில் தொடர்ந்து 10,000 கன அடி நீர் திறப்பு
கிருஷ்ணகிரி, 13 ஆகஸ்ட் (ஹி.ச) கர்நாடக மாநிலத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களான கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 10,000 கனஅடி நீர் தொடர்ந்து இரண்டாவது நாளாக திறந்துவி
Kabini Dam


கிருஷ்ணகிரி, 13 ஆகஸ்ட் (ஹி.ச)

கர்நாடக மாநிலத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களான கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 10,000 கனஅடி நீர் தொடர்ந்து இரண்டாவது நாளாக திறந்துவிடப்பட்டு வருகிறது.

84 அடி முழு கொள்ளளவு கொண்ட கபினி அணையின் தற்போதைய நீர்மட்டம் 82.36 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று வினாடிக்கு 8,885 கனஅடி நீர் வந்த நிலையில், இன்று அது 8,448 கனஅடியாக குறைந்துள்ளது.

இருப்பினும், காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு நேற்று போலவே இன்றும் வினாடிக்கு 10,000 கனஅடியாக தொடர்கிறது.

இதற்கிடையில், 124.80 அடி முழு கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று 109.53 அடியாக இருந்த நிலையில், இன்று 109.74 அடியாக சற்று உயர்ந்துள்ளது.

ஆனால், அணைக்கு வரும் நீர்வரத்து நேற்று 6,473 கனஅடியாக இருந்த நிலையில், இன்று 4,875 கனஅடியாக குறைந்துள்ளது.

குடிநீர் தேவைக்காக கே.ஆர்.எஸ். அணையில் இருந்து கால்வாய் வழியாக வினாடிக்கு 2,310 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக அணைகளின் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், காவிரி நீர் வெளியேற்ற நிலவரத்தையும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN