காவிரி நீர் விவகாரத்தில் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கோரி டி.ஆர்.பாலு நோட்டீஸ்
சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.) காவிரி நீர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக் கோரி திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள நோட்டீஸில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக
Tr balu


Bb


சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக் கோரி திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள நோட்டீஸில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் திறந்துவிடப்படாததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளதாகவும், லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கர்நாடகாவில் முன்மொழியப்பட்டுள்ள மேகதாது அணைத் திட்டம் நிலைமையை மேலும் மோசமாக்கும் என டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார்.

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் நாள்தோறும் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த அவசரமான விவகாரம் குறித்து மக்களவையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து, உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என டி.ஆர்.பாலு தனது நோட்டீஸில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ