மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு விசாரணை ஆக. 21 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
மதுரை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது கடந்த 2025 ஆம்
Ajith Kumar


மதுரை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் , ஓட்டுனர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அஜித்குமார் கொலை சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டது.

இந்த வழக்கானது மதுரை மாவட்ட ஐந்தாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி தாமோதரன் முன்பாக வழக்கு விசாரணை இன்று வந்தபோது,

வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையிலுள்ள முன்னாள் தனிப்படை காவலர்களான 6 பேரும் காணொலி மூலமாக நீதிபதி முன்பாக ஆஜராகினர்.

இதையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி தாமோதரன் உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / ANANDHAN