Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில்,
நேற்று சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழகத்தில் மக்களவை வரையறை தொடர்பாக தனி தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
இதற்கு ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முழுமையாக தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதி 13 முதல் 16 லட்சம் வாக்குகள் உள்ளன சட்டசபையில் தமிழக முதலமைச்சர் கொண்டுவந்துள்ள தனி தீர்மானம், தேவையில்லாத தீர்மானம்.
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே பார்வையாகத்தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு மக்களவைத் தொகுதி வரையறை தொடர்பாக எந்தவித பாதிப்பும் வராது சட்டமன்றத்தில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப குரல் கொடுக்கப்பட வேண்டும்.
எதிர் கட்சி அதை விட்டுவிட்டு சட்டமன்றத்தில் எங்கள் மாமா 900 கோடி ரூபாய் கொடுத்தார், உங்கள் தந்தையிடம் கேளுங்கள் என என பேசி வருகிறார்கள்.
மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பாக சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் பேச வேண்டும். அதை விட்டுவிட்டு இதுபோன்ற கருத்துகள் பேசுவதனால் எந்த பயனும் இல்லை.
தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக முதலீடு வந்துள்ளதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்து வருகிறார்.
அப்படி என்றால் அதற்காக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். முழுமையான தகவலையும் எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளது என்பது தொடர்பான தகவலையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN