4 வயது குழந்தை அடித்து துன்புறுத்தல் - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது!
நெல்லை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.) நெல்லை டவுன் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் மைதீன் கான். இவரது மகன் சையது பீர் முகமது (வயது 30). இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவர் தற்போது டவுன் பாரதியார் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், அதே பகுத
Pocso Act


நெல்லை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

நெல்லை டவுன் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் மைதீன் கான். இவரது மகன் சையது பீர் முகமது (வயது 30). இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவர் தற்போது டவுன் பாரதியார் தெருவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 35 வயது இளம்பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சௌயது பீர் முகமது அந்த வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அந்த இளம் பெண்ணின் 4 வயது மகளை அருகில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து சையது பீர் முகமது தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்துள்ளார். அப்போது அந்த சிறுமி சேட்டை செய்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த செய்யது பீர் முகமது சிறுமியை கடித்து துன்புறுத்தினார். மேலும் சராமரியாக அடித்துள்ளார். இதில் சிறுமி காயம் அடைந்தார்.

இதை அடுத்து சிறுமி அழுது கொண்டே தனது தாயிடம் தகவலை தெரிவித்த நிலையில், அவர் தனது மகளை பாலியல் ரீதியில் சீண்டியதாக டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சையது பீர் முகமது மீது வழக்குப் பதிவு செய்து இன்று கைது செய்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN