Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச)
79-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக சென்னை ராஜாஜி சாலையில் கடந்த மூன்று நாட்களாக சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இன்று மூன்றாம் நாளாக நடைபெற்ற ஒத்திகையில் காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை உள்ளிட்ட சீருடைப் பணியாளர்கள் அணிவகுப்பில் பங்கேற்று ஒத்திகை பார்த்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தி உரையாற்ற உள்ளார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெற உள்ளது.
சென்னை மாநகரக் காவல் துறை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளைப் பலப்படுத்தியுள்ளது. ஒத்திகை காரணமாக மெரினா கடற்கரை, காமராஜர் சாலை மற்றும் ராஜாஜி சாலை பகுதிகளில் காலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.
Hindusthan Samachar / vidya.b