ராமநாதபுரத்தில் அதிவேகமாக வந்த கார் மோதி இருசக்கர வாகன ஓட்டி பலி
ராமநாதபுரம், 13 ஆகஸ்ட் (ஹி.ச.) ராமநாதபுரத்தை அடுத்த சிங்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மச்சழகன். இவர் தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி–ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் சாலை
விபத்து


ராமநாதபுரம், 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

ராமநாதபுரத்தை அடுத்த சிங்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மச்சழகன். இவர் தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி–ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது, இருபுறமும் சாலையை கவனித்துவிட்டு கடக்க முயன்ற மச்சழகன் மீது, திருச்சியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி அதிவேகமாக வந்த கார் பயங்கரமாக மோதியது.

கார் மோதிய வேகத்தில் மச்சழகன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில், அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தில் வந்த மச்சழகன் மீது மோதும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த காட்சி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam