மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு - நீர்மட்டம் 80.31 அடியாக உயர்வு
சேலம், 13 ஆகஸ்ட் (ஹி.ச.) சேலம் மாவட்டத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் தாக்கம் குறைந்ததன் காரணமாக, நேற்று வினாடிக
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு - நீர்மட்டம் 80.31 அடியாக உயர்வு


சேலம், 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

சேலம் மாவட்டத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் தாக்கம் குறைந்ததன் காரணமாக, நேற்று வினாடிக்கு 8639 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 7833 கன அடியாக சரிந்துள்ளது.

நீர்வரத்து குறைந்தாலும், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 79.78 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 80.31 அடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் அணையின் மொத்த நீர் இருப்பு 42.26 டி.எம்.சி.யாக அதிகரித்துள்ளது.

இதனிடையே, டெல்டா விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது டெல்டா பாசனத்திற்காகக் காவிரியில் பிரதான தண்ணீர் திறக்கப்படவில்லை. காவிரி கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்ய மட்டுமே தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b