Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை13 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி மறுமதிப்பீடு மற்றும் வரி உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், அதற்கான ஆட்சேபனைகளை இன்று நேரடியாக தெரிவிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி சொத்து வரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதும் சொத்து உரிமையாளர்கள், தங்களது ஆட்சேபனைகளை இன்று காலை 10 மணி முதல் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் சென்று மனுவாக அளிக்கலாம். நேரில் வர இயலாதவர்கள் மின்னஞ்சல் மூலமாகவும் தங்கள் ஆட்சேபனைகளை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக ஆட்சேபனை தெரிவிப்பதற்கான மின்னஞ்சல் முகவரிகளையும் மாநகராட்சி வெளியிட்டுள்ளது. பேசின் பிரிட்ஜ் பகுதிக்கு உட்பட்ட மண்டலம் 1 முதல் 5 வரை வசிக்கும் பொதுமக்கள் rdcnorth2013@gmail.com என்ற முகவரிக்கும், புளியந்தோப்பு சேனாய் நகரை உள்ளடக்கிய மண்டலம் 6 முதல் 10 வரை வசிப்பவர்கள் rdccentral@chennaicorporation.gov.in என்ற முகவரிக்கும், அடையாறு பகுதிக்கு உட்பட்ட மண்டலம் 11 முதல் 15 வரை உள்ள குடியிருப்புவாசிகள் rdcsouth@chennaicorporation.gov.in என்ற முகவரிக்கும் தங்கள் ஆட்சேபனைகளை அனுப்பலாம்.
சொத்து வரி மதிப்பீட்டில் உள்ள குளறுபடிகள், திடீர் வரி உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள சுமை குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை முறையாக ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும் என்றும், பெறப்படும் அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b