Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாலுகா, இட்டமொழி, சுவிசேஷபுரம், மேலத்தெரு, கதவு எண் 9/60-ஐ சேர்ந்த அம்புரோஸ் ஜான்ராஜ், வயது 61/25, த/பெ. விசுவாசம் தேவதாசன் அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தனது வீட்டு மின் இணைப்பு எண் 073-009-781 மற்றும் அருகில் உள்ள 073-009-691 ஆகிய இரண்டையும் மின்வாரியம் தன்னிடம் கேட்காமல் ஒன்றாக இணைத்து, ரூ.148/- தவறான பில் அனுப்பியதாக குற்றம் சாட்டியிருந்தார்.
25 ஆண்டுகளாக ஒழுங்காக கட்டணம் செலுத்தி வந்த மனுதாரருக்கு, மின் அளவு பதிவு செய்யும் பணியாளர்கள் முறையாக தகவல் தெரிவிக்காமல், 88 அலகு மட்டுமே பயன்படுத்தியும் ரூ.148/- பில் அனுப்பி மன உளைச்சல் கொடுத்ததாகவும், பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அ. பிரம்மா ஆஜராகி வாதாடினர்.
திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிர்வாக காரணத்தால் திருநெல்வேலி கூடுதல் நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது
ஆணைய தலைவர் பிறவி பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முக பிரியா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய உத்தரவில்,
ரூ.148 தவறாக வசூலிக்கப்பட்ட தொகையை வட்டியுடன் மனுதாரருக்கு திருப்பி தர வேண்டும்.
ரூ.10,000 மன உளைச்சல் மற்றும் சிரமத்திற்கான இழப்பீடாக வழங்க வேண்டும்.
ரூ.10,000 வழக்கு செலவுத் தொகையாக வழங்க வேண்டும்.
16.07.2025-க்கு பிறகு திருமதி. ஷெக்கினா பெயருக்கு மாற்றப்பட்ட 073-009-691 இணைப்பின் பயன்பாட்டை மனுதாரர் கணக்கில் இருந்து பிரித்து, கணக்கை சரி செய்ய வேண்டும்.
மொத்தம் ரூ.20,148 45 நாட்களுக்குள் வழங்க தவறினால் 9% வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று எதிர் தரப்பினரான மின்சார வாரிய அதிகாரிகளுக்கு ஆணையம் கடும் உத்தரவு பிறப்பித்தது.
Hindusthan Samachar / ANANDHAN